Skip to main content

தகவல் திருட்டு புகார் - நிரந்தரமாக மூடப்படுகிறது கூகுல் பிளஸ்

நிரந்தரமாக மூடப்படுகிறது கூகுல் பிளஸ்

பயனாளர்களின் தகவல்களை கூகுள் திருடுவதாக செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஊடகம் ஒன்றில் கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் குறித்த அந்தரங்கத் தகவல்கள் திருடப்படுவதாக திங்கட்கிழமை செய்தி வெளியானது. 

இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது. 

கூகுள் பிளஸ், பேஸ்புக் சமூக வலைத்தளத்துக்குப் போட்டியாக 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நிரந்தரமாக மூடப்படுகிறது

மென்பொருள் பிழை காரணமாக பாதிக்கப்பட்ட 5,00,000 பயனர் கணக்குகள் குறித்த அந்தரங்க தகவல்கள், அந்நிய மென்பொருள் மேம்பாட்டாளர்களுக்கு தவறான முறையில் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே சமூக வலைத்தளமான கூகுல் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுகிறது என கூகில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

2015 மற்றும் மார்ச் 2018 இடையான காலப்பகுதியில், தனிப்பட்ட சுயவிவரத் தரவை, கூகுல் பிளஸ் சமூக தளத்தில் உள்ள மென்பொருள் பிழை, பிற அந்நிய மென்பொருள் வல்லுநர்களுக்கு சட்ட விரோதமாக அளித்திருப்பதை, கூகுல் நிறுவனத்தின் புலனாய்வாளர்கள் கண்டறிந்து, ஒரு மென்பொருள் தடுப்பினை அளித்தனர்.

இதன் காரணமாக கூகுல் நிறுவனத்தின் Alphabet Inc யின் பங்கு 2.6% குறைந்து $ 1138.53 ஆக இருந்தது.

இதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற முகநூல் தனது 87 மில்லியன் பயனர்களின் கணக்குகளை தவறாக பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.