Skip to main content

திரைக்கு வர காத்திருக்கும் கோலிவுட் படங்கள்!

Movies Waiting For Release Before Diwali in Kollywood

தீபாவளிக்கு முன்பு 10 பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

தீபாவளிக்கு முன்பு 10 பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாமுனி Vs எனை நோக்கி பாயும் தோட்டா

ஆர்யாவின் மகாமுனி, நடிகர் தனுஷ் நடிப்பில் "எனை நோக்கி பாயும் தோட்டா", யோகிபாபுவின் ஜாம்பி ஆகிய 3 படங்களும் செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது.

மகாமுனியில் ஆர்யா 2 வேடங்களில் நடித்துள்ளார். 

கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகி உள்ள "எனை நோக்கி பாயும் தோட்டா" பண பிரச்சினையில் சிக்கி நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகிறது. 

யோகி பாபுவின் "ஜாம்பி"

ஜாம்பி ரத்த காட்டேறிகளை பற்றிய நகைச்சுவை படம். 

சிவப்பு மஞ்சள் பச்சை

சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள "சிவப்பு மஞ்சள் பச்சை" படம் வருகிற 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

காப்பான்

சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா ஆகியோர் நடித்துள்ள காப்பான் படம் செப்டம்பர் 20-ந்தேதி வெளியாகிறது. 

கே.வி.ஆனந்த் இயக்கி உள்ள இந்த படத்தில் சூர்யா அதிரடிப்படை காவல் அதிகாரியாக வருகிறார். 

நம்ம வீட்டு பிள்ளை:

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை செப்டம்பர் 27-ந்தேதி வெளியாகிறது.

சங்கத்தமிழன், அசுரன், 100 பர்சன்ட் காதல்

விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் அசுரன், ஜி.வி.பிரகாசின் 100 பர்சன்ட் காதல் ஆகிய படங்களை அடுத்த மாதம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் படத்தை 10-ந்தேதியும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

Movies Expected to Release Before Diwali in Kollywood

Tamil