Skip to main content

ரயில் நிலையங்களின் தூய்மை தர அறிக்கை: ஜெய்ப்பூர் முதலிடம்!

இந்திய ரயில்வே

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் தூய்மை தரம் குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 3-ம் நபர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. 

இதில் 407 ரயில் நிலையங்களின் தர அறிக்கை வெளியிடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு 720 ரயில் நிலையங்களும், முதல் முறையாக புறநகர் ரயில் நிலையங்களும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
 
இந்த ஆய்வின்படி ரயில் நிலையங்களின் தூய்மை தரவரிசைப் பட்டியலை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களை ராஜஸ்தான் மாநிலம் பிடித்து உள்ளது. 

அங்குள்ள ஜெய்ப்பூர், ஜோத்பூர், துர்காபுரா ரயில் நிலையங்கள் முதல் 3 இடங்களை பிடித்து உள்ளன.

புறநகர் ரயில் நிலையங்களில் அந்தேரி முதலிடம்:

மேலும் 109 புறநகர் ரயில் நிலையங்களில், அந்தேரி, விரார், நைகான் ரயில் நிலையங்கள் முதல் 3 இடங்களை பெற்றுள்ளன. 

வடமேற்கு ரயில்வே மண்டலம் முதலிடம்: 

ரயில்வே மண்டலங்களில் முதல் 3 இடங்கள் முறையே வடமேற்கு ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே மண்டலங்களுக்கு கிடைத்து உள்ளன. 

Country's Top Three Cleanest Railway Stations are from Rajasthan: Survey

Tamil