Skip to main content

ரஜினியை இயக்கும் ஏஆர் முருகதாஸ்

ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த் அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேட்ட படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து, ஏஆர் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்தை சன் பிக்ஸர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மிக மாஸான நடிகராக திகழும் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையிலும், தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார். 

 

ஏ.ஆர்.முருகதாஸ்

 

ரஜினியின் அடுத்த படம்:

பேட்ட படம் வேகமாக தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினி அடுத்ததாக வெற்றி இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உடன் இணையப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

தற்போது ரஜினியின் பேட்ட படத்தை தயாரித்து வரும் சன் பிக்ஸர்ஸ் நிறுவனமே, இந்த புதிய  படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே சமயம் முருகதாஸின் விஜய் கூட்டணியில் சர்கார் படத்தையும் சன் பிக்ஸர் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.