Skip to main content

பொருளாதரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது

பால் எம். ரோமர்,வில்லியம் டி. நார்தாஸ்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகியோர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்களான வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகியோர் வென்றுள்ளனர்.

வில்லியம் நார்தாஸ் பருவநிலை மாற்றம் தொடர்புடைய பொருளாதார ஆய்வுகளுக்காக நோபல் பரிசைப் பெறுகிறார்.

நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு உதவும் கண்டுபிடிப்புகளுக்காக பால் ரோமருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இடது பால் ரோமர் வலது வில்லியம் நார்தாஸ்
இடது பால் ரோமர், வலது வில்லியம் நார்தாஸ்

நோபல் பெற்றது குறித்து பால் ரோமர் குறித்து கூறும்போது, "மனிதர்கள் நினைத்தால் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கலாம்.  நாம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்தால் நாம் ஆச்சரியப்படும் முடிவுகளைப் பெறலாம். நாம் நினைக்கும் அளவு இது கடினமானது அல்ல'' என்றார்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை அடுத்த அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது, இந்நிலையில் இன்றுடன் இந்த 2018 ஆம் ஆண்டிற்கான நோபல் சீசன் நிறைவடைகிறது. 

இந்த ஆண்டு ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் ஒன்பது மில்லியன் க்ரோனோர்(ஸ்வீடன் நாட்டு பணம்)  ($ 1.01 மில்லியன், € 871,000) பரிசு தொகை வழங்கப்படுகிறது.

ஒரே துறையின் கீழ் பலர் வெற்றி பெறும் பட்சத்தில் பரிசு தொகையை அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.