Skip to main content

பள்ளிச் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் கிடையாது‍ உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பள்ளிச் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் கிடையாது‍

ஆதார் இல்லை எனக்கூறி குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மறுக்கக்கூடாது. சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு .

பள்ளிகளில் சேர முடியாது சூழல்

மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் எண் குறித்து தொடக்கம் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தன. ஆரம்பத்தில் ஆதார் கட்டாயம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், படிப்படியாக கட்டாய மாக்கப்பட்டது. 

குறிப்பாக கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை ஆதார் எண் கட்டாயம் என்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வந்தது. இதன் காரணமாக ஆதார் இல்லாத மாணவர்கள் பள்ளிகளில் சேர முடியாது சூழல் ஏற்பட்டது. 

பள்ளிச் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் கிடையாது‍

 இதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதேபோல் ஆதாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, உச்சநீதிமன்றம் விசாரிக்கப்பட்டு வந்தது. 

பள்ளிச் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் கிடையாது

இந்நிலையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இது தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அரசியல் சாசனப்படி ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது. மேலும் பள்ளிச் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

ஆதார் இல்லை எனக்கூறி குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மறுக்கக்கூடாது. சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

 

பள்ளிச் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் கிடையாது‍

 

மேலும் பள்ளிச் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயம் கிடையாது என்று உத்தரவிட்டனர். கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால், அதில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வங்கிக் கணக்கு தொடங்க, செல்போன் இணைப்புப் பெற ஆதார் கட்டாயமாக்கக் கூடாது. வருமான வரி கணக்கு எண்ணான பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.