Skip to main content

பல மணி நேர மகிழ்ச்சியை அழிக்கும்-ஒரு நிமிட கவலை

வாழ்க்கை

உளவியல் அறிஞர் ஒருவர் கணினித்துறை பணியார்களுக்கு மன இறுக்கம் குறித்து பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார்...

சாதரணமாக அனைவரிடமும் கலந்துரையாடிக் கொண்டே மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ஜாடியின் மூடியை திறந்து பக்கத்தில் வைத்திருந்த கண்ணாடி குடுவையில் தண்ணீரை ஊற்றினார்.

குடிப்பதற்குத்தான் தண்ணீர் ஊற்றுகிறார் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் அதை குடிக்காமல் கையில் எடுத்து அனைவருக்கும் தெரியும்படி உயர்த்தினார்.

“என் கையில் வைத்திருக்கும் தண்ணீரின் அளவு எவ்வளவு இருக்கும்?” என வினவினார். எல்லோரும் ஒவ்வொரு அளவை சொன்னார்கள்.

கடைசியில், “நீங்கள் கூறும் அளவுகளில் ஏதேனும் ஒன்றாக தான் நிச்சயம் இருக்கும். 

ஆனால் நான் இதை எவ்வளவு நேரம் இதை இப்படியே கையில் உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்க இயலும்..?.

ஒரு நிமிடம் வைத்திருந்தால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு மணி நேரம் வைத்திருந்தால் என் கை வலிக்கும்.

ஆனால் நான் இதை நாள் முழுக்க இப்படியே வைத்திருந்தால் என் நிலை என்ன ஆகும்? என நினைத்துப் பாருங்கள்.

நம் கவலையும் இப்படித்தான். ஒரு சில வினாடிகள் நினைத்து வருந்தினால் ஒன்றும் ஆகாது. 

ஒருவேளை ஒரு சில மணி நேரம் என்றால் மனதை பாதித்து விடும்.

எப்பொழுதுமே நினைத்துக் கொண்டிருத்தால், நமது வாழ்வின் ஏற்றத்தையே அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்” என்று கூறி தன் உரையை 
முடித்தார். 

இந்த உரையை கேட்ட அரங்கம் கைதட்டல்களால் நிரம்பியது.

எதற்கும் உற்சாகமிழந்து விடாதீர்கள். உலகம் இருக்கிறது. நாட்கள் இருக்கின்றன. எதை இழந்தாலும் எதிர்காலம் இருக்கிறது. 

வாழ்க்கை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கின்றது. 

நமது இலக்கை நோக்கிய பயணத்தில் எதிர்படுகின்ற தடைகளும், போராட்டங்களும் தான் வாழ்க்கை. 

கவலைகளை வளர விடாதீர்கள். பல மணி நேர மகிழ்ச்சியை அழிக்கும் திறன் ஒரு நிமிட கவலைக்கு உண்டு. 

மனதின் கவலையை தூர எறியுங்கள். 

ஒவ்வொரு வினாடியும் கொண்டாடுங்கள்.......

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.