Skip to main content

பிரதமர் நரேந்திர மோடிக்கு "உலக கோல்கீப்பர் விருது"!!!

narendra modi

கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இந்தியாவில் "தூய்மை இந்தியா" திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டது இந்தத் திட்டம்.

இந்த தூய்மை இந்தியா திட்டத்துக்காக மோடிக்கு அமெரிக்காவின் பில்கேட்ஸ்க்கு சொந்தமான "பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ்" அமைப்பின் சார்பாக விருது வழங்கப்பட்டது.

narendra modi

இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 98 சதவீத கிராமங்களில் கிராமப்புற சுகாதார பாதுகாப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் மோடிக்கு சர்வதேச சாதனையாளர் விருதான உலக கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தினால், 3 லட்சம் மக்கள் பல்வேறு நோய்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர், என உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதை மோடி சுட்டிக் காட்டினார்.

PM Modi honoured with "Global GoalKeeper" Award by Bill & Melinda Gates Foundation for Swachh Bharat Abhiyan

GLOBAL GOAL KEEPER

 

Tamil