Skip to main content

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு!!!

சீனா ‍இந்தியா உறவு

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே முறைசாரா உச்சிமாநாடு தமிழத்தின் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் முதன்முதலாக முறைசாரா உச்சிமாநாட்டில் சீனாவின் வூகன் நகரில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28-ந் தேதி சந்தித்து பேசினர்.

அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு நமது தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

பொதுவாக வெளிநாட்டுத்தலைவர்கள் யார் இந்திய பயணம் மேற்கொண்டாலும், அவர்கள் டெல்லி வருவதும் அங்கே அவர்கள் பிரதமரையும், ஜனாதிபதியையும், வெளியுறவு மந்திரி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசுவதுதான் காலம் காலமாக மரபாக இருந்து வந்தது.

mamallapuram

ஆனால் பிரதமராக முதல் முறை மோடி பதவி ஏற்ற பின்னர் இதில் அவர் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். அது, வெளிநாட்டு தலைவர்களை தலைநகருக்கு வெளியே அழைத்துச்சென்று சந்திப்பதாகும். இது அந்த தலைவர்களுக்கும் ஒரு மாற்றமாக அமைந்தது. இந்தியாவின் பல தரப்பட்ட மாநிலங்களுக்கு, நகரங்களுக்கு செல்கிறபோது அங்குள்ள கலாச்சாரம், பண்பாட்டினை அந்த தலைவர்கள் நேரில் காண்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

வெளிநாட்டு தலைவர்களின் வருகையால், அவர்கள் வரக்கூடிய நகரங்கள் புத்துயிரூட்டப்படுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.

இந்நிலையில் சீன அதிபர் உடனான, 2-வது முறைசாரா உச்சிமாநாட்டை மாமல்லபுரத்தில் நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

மாமல்லபுரத்தை சீன அதிபர் ஜின்பிங்தான் தேர்வு செய்திருக்கிறார். மாமல்லபுரத்தின் வரலாற்றுப்பெருமை, கலாச்சார பெருமையை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.

மாமல்லபுரத்தின் வரலாற்றுப் பின்னணியையும், கலாச்சாரத்தையும் அறிந்துதான் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு ஜின்பிங் இந்த மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trade deficit, market access issues to be discussed in Modi-Xi summit in Mamallapuram

Tamil