Skip to main content

பாரா ஆசிய போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்

மாரியப்பன்

ஜகார்த்தா: பாரா ஆசிய போட்டிகளில், தமிழக வீரர் மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

தங்கம் வென்றார் இந்திய வீரர் சரத்குமார்

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் மூன்றாவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சரத்குமார் 1.90 மீ., உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.

26 வயதான சரத்குமார் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இளம் வயதில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட சரத்குமார் 2017-ம் ஆண்டு நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் பாத்தி (1.82 மீ.,) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 

வெண்கலம் வென்றார் மாரியப்பன்: 

மாரியப்பன்(1.67 மீ.,) வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். 

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர்சிங் குர்ஜார் (61.33 மீ.,) வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ரிங்கு (60.92 மீ.,) வெண்கலப்பதக்கம் பெற்றார். 

தரவரிசையில் இந்தியா ?

பாரா ஆசிய போட்டியில் இதுவரை 8 தங்கம், 17 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தமாக 50 பதக்கங்கள் வென்ற இந்தியா 9 வது இடத்தில் உள்ளது. 255 பதக்கங்கள் ( 137 தங்கம், 69 வெள்ளி, 49 வெண்கலம் ) வென்ற சீனா முதலிடத்தில் உள்ளது. 

para asian games 2018-mariappan won bronze and india at 9 th place

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.