Skip to main content

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு "தாதா சாகேப் பால்கே விருது"!!

Amitabh Bachchan named for Dada Sahab Phalke award

இந்தியாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் திரைப்படத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக, நாட்டின் மதிப்புமிக்க "தாதா சாகேப் பால்கே" விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"இரண்டு தலைமுறைகளாக ரசிகர்களை மகிழ்வித்து ஊக்கமளித்த இந்தியாவின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் "தாதா சாகேப் பால்கே" விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக" தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்வீட் செய்துள்ளார்.

அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இந்திய நாடும், சர்வதேச திரைப்பட கலை சமூகமும் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் தெரிவித்தார். 

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இந்த விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. 

இந்த விருது "தங்க தாமரை மற்றும் பத்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை" உள்ளடக்கியது.

இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு இந்திய திரை உலகினரும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Amitabh Bachchan named for Dada Sahab Phalke award

Tamil