Skip to main content

பாகிஸ்தான் நிலநடுக்கம்: 30 பேர் உயிரிழப்பு!

Pakistan earthquake

5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் லாகூரை மையமாக கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 5.8 பதிவான நில நடுக்கத்தின் அதிர்வு இந்திய தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகருக்கு வடகிழக்கே 173 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நேற்று மாலை 3.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

earthquake in india and pakistan

ரிக்டர் அளவு கோளில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. 

இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிகவளாகங்களை விட்டுவெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.  

இந்த நிலநடுக்கம் காரணமாக பாகிஸ்தானில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

காயமடைந்தவர்களில் சுமார் 100 பேர் ஆபத்தான நிலையில் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

earthquake in pakistan

 

இந்தியாவிலும் அதிர்ந்த கட்டிடங்கள்:

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.

காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

நில அதிர்வு காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர்.

5.8-magnitude earthquake claims 30 lives in Pakistan occupied Kashmir

earthquake

 

Tamil