Skip to main content

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம்

sarkar

நடிகர் விஜய் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக மறைமுகமாகக் கூறியுள்ளார்.
 

தான் முதல்வரானால், தமிழகத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவேன் என்று சர்க்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

அரசியல் குறித்து நீண்ட நாட்களாக அமைதி காத்துவந்த நடிகர் விஜய், தான் தமிழகத்தின் முதல்வரானால் நமது அன்றாட வாழ்வில் ஒன்றிப்போன ஊழலை அழிக்கப் போராடுவேன் என்று கூறியுள்ளார். 

தீபாவளியன்று அவர் நடித்த சர்க்கார் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசினார்.

நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலில் நுழைந்து, தேர்தலில் போட்டியிடும் நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் குறித்த இவரது பேச்சு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 

ரசிகர்களால் "தளபதி" என்று அன்பாக அழைக்கப்படும் நடிகர், ஒரு உயரிய கொள்கையை உடையவர், நாட்டில் ஊழலை ஒழிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். "நான் முதல்வரானால் நாட்டின் முதல்வராக மட்டும் செயல்பட மாட்டேன்" என்று கூறினார். "லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலுமாக ஒழிப்பது எளிது அல்ல. நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக அதை சகித்துக் கொள்ள கற்றுக் கொண்டோம். எனவே அவை முற்றிலும் நாட்டை விட்டு அகற்றப்படுமா என்று எனக்கு தெரியாது என்றும் கூறினார். தனது புதுப்படமான சர்க்கார் பற்றி கூறும்போது,மெர்சல் திரைப்படத்தில் மிகக் குறைவாகவே அரசியலிருந்ததாகவும்,ஆனால் சர்காரில் நிறைய அரசியல் கருத்துக்கள் பற்றி கூறி இருப்பதாகவும் விஜய் கூறினார். 

அரசர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கதையைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், ஒரு மாநிலத்தில், உயர்மட்டத்தில் ஆளும் ஆட்கள் நேர்மையானவர்களாக இருந்தால் மட்டுமே, அரசாங்கத்தில் பணிபுரியும் பிற அரசாங்க ஊழியர்களும் நேர்மையாக இருப்பார்கள். அரசாங்க பொறுப்பில் உள்ளவர்கள் நேர்மையற்றவர்களாகவும், ஊழல் செய்பவர்களாகவும் இருந்தால், அவர்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களும் அப்படியே தான் இருப்பார்கள். தலைவர் ஒரு நல்ல மனிதராக இருந்தால், கட்சி தானாகவே நல்லதாக இருக்கும்.

காங்கிரஸ்- சூப்பர் டூப்பர் கட்சி  
 

congress

 

மகாத்மா காந்தியைப் பற்றி பேசிய அவர், காங்கிரஸ் கட்சி காந்தியின் தலைமையின் கீழ் "சூப்பர் டூப்பர்" கட்சியாக செயல்பட்டதாக கூறினார். இன்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு சிறந்த கட்சியாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். காந்திஜி ஒரு மிகச்சிறந்த மனிதர். ஆதலால் தான் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், காமராஜர் மற்றும் ராஜாஜி அவரது ஆதரவாளர்களாக இருந்தனர்.

தலைவர்கள் இயற்கையில் வெளிப்படையாக இருந்தால் தான் அவர்களின் கீழ் இருக்கும் அரசாங்கமும் மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்கும்.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.