Skip to main content

நடிகர் அஜித்தின் புதிய அவதாரம் !!!

நடிகர் அஜித்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆளில்லா விமானங்கள் வைத்து சாகசம் செய்யும் போட்டியில், நடிகர் அஜித் ஆலோசகராக பணிபுரியும் ‘தக்‌ஷா’ குழு பங்கேற்பு. 

நடிகர் அஜித் நடிகராக மட்டுமில்லாமல், பைக் ரேஸ், புகைப்பட கலைஞர் என பல துறைகளில் அசத்தி வரும் நிலையில், தற்போது ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றார். 

 

நடிகர் அஜித்

 

இவர் கடந்த மே மாதம் அண்ணா பல்கலைக் கழகத்தை சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின்(எம்ஐடி) ஆளில்லா சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர்கள் குழுவிற்கு ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டார். 

தக்‌ஷா ட்ரோன் : 

இந்நிலையில் இந்திய அளவில் நடந்த ஆளில்லா சிறிய ரக விமானம் பறக்க விடும் போட்டியில், இந்தியாவின் 111 பொறியியல் கல்லுரி மாணவர்கள் கலந்து கொண்டனர். 

 

நடிகர் அஜித்

 

இதில் அஜித்தின் எம்.ஐ.டி மாணவர்கள் குழுவும் பங்கேற்றது. அந்த மாணவர்கள் தயாரித்த தக்‌ஷா என்ற ஆளில்லா விமானம், தரையிலிருந்து 15 அடி உயரத்தில், 6 மணி நேரம், 7 நிமிடம், 45 வினாடிகள் வரை நிலை நிறுத்தப்பட்டது. 

 

நடிகர் அஜித்

 

ஆஸ்திரேலிய போட்டியில் கலந்து கொள்ளும் தக்‌ஷா குழு 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்தில், இம்மாதம் நடைப்பெற உள்ள ஆளில்லா விமானம் போட்டியில், தக்‌ஷா விமானம் பறக்க உள்ளது . இந்த விமானம் 10 கிலோ எடையை சுமந்து பறக்கும் திறன் வாய்ந்தது என்பதால், இதை ‘ஏர் ஆம்புலன்ஸ்’ ஆக பயன்படுத்தலாம் என அஜித் ஆலோசனை வழங்கியுள்ளார். 

 

நடிகர் அஜித்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.