Skip to main content

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் இர்பானின் தந்தை போலி மருத்துவர்!

நீட் தேர்வு ஆள் மாறாட்டம்

நீட் ஆள்மாறாட்டத்தில் உதித் சூர்யா என்ற ஒரு மாணவர் சிக்கியதைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து பல மாணவர்கள் கைதாகிவருகின்றனர். 

இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள தரகர்கள், பயிற்சி மையங்கள் என இந்தக் குற்றச் செயலுக்குப் பின் பெரிய நெட்வொர்க் இருப்பது தெரியவந்துள்ளது வரும் நாட்களில் கைது படலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் இர்ஃபானின் தந்தை முகமது சஃபி போலி மருத்துவர்:

இந்நிலையில் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகியுள்ள மாணவர் இர்ஃபானின் தந்தை முகமது சஃபி போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முகமது சஃபி வாணியம்பாடியில் கைது செய்யப்பட்டார். இரு நாட்களாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

neet fradulent
இர்பான் மற்றும் அவரது தந்தை சஃபி

இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. முகமது சஃபி வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மருத்துவமனை நடத்திவருகிறார்.

அந்தப் பகுதியில் பிரபலமான மருத்துவராக உள்ளார்.

இவர் 1990 ஆம் ஆண்டு பிஜப்பூர் அல் அமீன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஒரு ஆண்டு மட்டுமே மருத்துவம் படித்தார். அதன்பின் அவர் தனது படிப்பை எங்கும் தொடரவில்லை. இந்நிலையில் இவர் இரு மருத்துவமனைகளை நடத்திவருகிறார். 

நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையிலும் இவரது மருத்துவமனை செயல்பட்டுவருகிறது.

neet impersonation

இடைத்தரகர் ரசீத் மூலம் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ரஷித் உடனான தொடர்பு இவருக்கு கோவிந்தராஜு என்ற மருந்தாளுநர், ஜெயராமன், வேதாச்சலம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்தவர்கள் உதவியுள்ளனர்.

மாணவர் கல்லூரியில் இருந்து நீக்கம்!

தற்போது முகமது சஃபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

இதற்கிடையில், மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜலு இர்ஃபானை கல்லூரியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

Neet Impersonation: Son and Father Partnership in crime

Tamil