Skip to main content

முதுமையில் தனிமை கொடியது

முதுமை

தன் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதுமை பருவத்தில் தனிமையில் வாழ்பவர்கள் விரைவாக மரணம் அடைகிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக் கழக மருத்துவமனையை சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.

13,463 முதியவர்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அதற்கு பதில் அளித்த அவர்கள்

"தனிமை கொடுமையால்தான் பல நோய்கள் தங்களுக்கு ஏற்பட்டது" என்றனர். 

 

முதுமை

 

தனிமையால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படுகிறது.

இதேநிலை தொடர்ந்தால் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலே சுட்டிக் காட்டப்பட்ட செய்திப்படி தனிமை இனிமை தரும் என்பதைவிட, தனிமை இனிமை தராது,கொடுமையான மரணத்தைத்தான் தரும் என்பது இந்த ஆய்வுகளால் நமக்கு உணர்த்தப்படுகிறது.

தனிமையில் இருந்து மீள என்ன வழி?

முதுமையில் தன் பிள்ளைகளால் கைவிடப்பட்டோர், தனிமையில் தவிப்பவர்கள், நம்மை கரையேற்ற யாரேனும் படகோடு வருவார்கள் என காத்திருக்காமல் எதிர் நீச்சலடித்து கரைச்சேர முயல வேண்டும்.

ஏதேனும் செல்ல பிராணி வளருங்கள். அதனுடன் நேரத்தை செலவிடுங்கள். 

 

முதுமை

 

தினமும் புத்தகம் படிப்பது, நல்ல இசை கேட்பது, பழைய புகைப்பட ஆல்பங்களை பார்ப்பது, நண்பர்களுடன் வாரம் ஒரு முறை பேசுவது, பிடித்த வேலையில் ஈடுபடுவது இவைகள் தனிமையை போக்கும் அருமருந்துகள். 

வசதியானவர்கள் பிறரை மகிழ்விக்க நம்மால் ஆன உதவிகளை செய்யலாம். ஏதேனும் சமூகத் தொண்டில் ஈடுபடுங்கள்.

 

முதுமை
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.