Skip to main content

முகநூல், இன்ஸ்டாகிராமில் காலவரம்பு கருவிகள் அறிமுகப்படுத்த திட்டம்

காலவரம்பு

முகநூல் ஒரு தினசரி நினைவூட்டலை அறிமுகப்படுத்த உள்ளது, இதன் மூலம் பயனர்கள் எச்சரிக்கை செய்தால், அவர்கள் முகநூலில் தங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டிய நேர வரம்பை அமைக்கலாம்.

ஒரு அறிக்கையில், சமூக ஊடகவியலாளர்கள் -முகநூல் உரிமையில் உள்ள இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் - "மக்கள் தங்கள் நேரத்தை நிர்வகிப்பதற்கு புதிய கருவிகளை அறிமுகம் செய்ய உள்ளோம்". என்றனர்.

கருவிகளில் அறிவிப்புகளை குறைப்பதற்கான ஒரு வழியாக கருதப்படும் இந்த புதிய தொழில்நுட்பம், பயனர்கள் தளங்களில் எவ்வளவு நேரத்தை செலவழித்தார்கள் என்பதை கண்காணிக்கும் ஒரு டாஷ்போர்டு ஆகும்.

"மக்கள் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் செலவிடும் நேரம் நேர்மறையாகவும், ஊக்கமளிக்கவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  

இந்த கருவிகள் மக்கள் எங்கள் தளங்களில் செலவழிக்கும் நேரத்தின் கட்டுப்பாடும், பெற்றோர்களுக்கும் இளம் வயதினருக்கும் இடையே உள்ள புரிதல்களில், இந்த சமூக ஊடகங்கள் குறித்த ஒரு நல்ல கருத்தை பெற்றோர்களின் மனதில் விதைக்கும்.  

 

காலவரம்பு

 

முகநூல் ஒரு தினசரி நினைவூட்டலை அறிமுகப்படுத்த உள்ளது, இதன் மூலம் பயனர்கள் எச்சரிக்கை செய்தால், அவர்கள் இந்த ஊடங்கங்களில் செலவழிக்க வேண்டிய நேரத்தை அவர்களே அமைத்து, அந்த நேரவரம்பு பயனாளிக்கு நினைவூட்டும்.

இந்த ஆண்டு முன்னதாக, முகநூல் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், "2018 இல், பேஸ்புக் பயன்படுத்த எளிதானதாக மட்டுமல்லாமல், மக்களின் நல்வாழ்வு மற்றும் சமுதாயத்திற்கும் நல்லது என்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறோம்" என்றார்.

நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து, வைரல் காணொளிகள் ஒரு குறிப்பிடத்தக்க அளவு குறைந்து காணப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் முகநூலில் செலவழிக்கப்பட்ட காலவரம்பு 5% வீழ்ச்சி கண்டது.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.