Skip to main content

மழை காரணமாக தாமதமான விவசாயம் - கவலையில் விவசாயிகள்

மழை காரணமாக தாமதமான விவசாயம் - கவலையில் விவசாயிகள்

கோவை: கோடை மழை காரணமாக, கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால், காய்கறி மற்றும் தானியங்கள் பயிரிடுவதில் 20 நாட்கள் தாமதம் ஆகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக, கோடை காலத்தில் பயிர் செய்வதற்கான மண்ணை விவசாயிகள் தயார் படுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், கடந்த வாரம் மழை பொழிவு குறைந்த நிலையில், தொண்டாமுத்தூர், அன்னூர் மற்றும் ஆனைமலை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

தோட்டக்கலை அதிகாரிகள், இந்த வருட கோடை மழை நிலத்தடி நீரை அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அது மண் தயாரிப்பு நடவடிக்கைகளை கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு தாமதப்படுத்தியது என்றும் கூறுகின்றனர்.

இருப்பினும், தொண்டமுத்தூரில் சிறிய வெங்காயம் பயிரிடப்பட்டிருப்பதாகவும் கூறும் விவசாயி பெரியசாமி வழக்கமாக சிறிய வெங்காயம் விதைப்பு மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்கும், ஆனால் இந்த ஆண்டு பலத்த மழை காரணமாக, கடந்த வாரம் இறுதியில் தான் தொடங்கியது என்றார் பெரியசாமி.

மஞ்சள் சாகுபடி 20 நாட்களுக்கு தாமதமாகி, மேலும் 10 நாட்கள் தாமதமாக துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.