Skip to main content

மேட்டூர் அணை நீர்மட்டம் 112.04 அடியாக உயர்ந்தது!!!

மேட்டூர் அணை

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 20000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்டது. அணை கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 100 அடியைக் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 107064 கன அடியாக இருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை விநாடிக்கு 1,04,436 கன அடியாக குறைந்தது.    

புதன்கிழமை இரவு அணை நீர்மட்டம் 105 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 71 டிஎம்சி யாக அதிகரித்தது. அணை பகுதிகளில் ஏற்கனவே, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் அணை முழுகொள்ளவை எட்டவுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்காக நேற்று மேட்டூர் அணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திறக்கப்ட்டது.

 

மேட்டூர் அணை

 

முதற்கட்டமாக விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.    

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.04 அடியாகவும். நீர் இருப்பு 81.33 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1,01,277 கன அடியிலிருந்து 59,954 கன அடியாக குறைந்துள்ளது.    

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.