Skip to main content

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பகீர் பாலியல் குற்றச்சாட்டு - எது உண்மை ?

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பகீர் பாலியல் குற்றச்சாட்டு - எது உண்மை ?

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற "வீழ மாட்டோம்" நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தங்கியிருந்த விடுதி அறைக்கு தன்னை தனிமையில் அழைத்தாக பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பகீர் குற்றச்சாட்டை எழுப்பினார்.

7 தேசிய விருதுகளை பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து மீதான சின்மயியின் இந்த குற்றச்சாட்டு, தமிழ் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காலம் பதில் சொல்லும்-வைரமுத்து

இந்நிலையில் “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருவதாகவும், உண்மையைக் காலம் சொல்லும்” என்றும் வைரமுத்து தெரிவித்திருந்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்-சுரேஷ்

இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக சின்மயி குறிப்பிட்ட சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் “சின்மயி கூறுவது போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. வைரமுத்து மீது பொய்யாக குற்றம்சாட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் வைரமுத்து மீது சின்மயி கூறும் பாலியல் குற்றச்சாட்டில் உண்மையில்லை என கூறியுள்ளார்.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.