Skip to main content

குஜராத் மழை எதிரொலி: 114 அணைகளுக்கு உயர் எச்சரிக்கை!!!

gujarat flood

குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக 100 க்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது.

எனவே வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அனைத்து அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை முன் எச்சரிக்கையுடன் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மொத்த பருவ மழையை விட 110% க்கும் அதிகமாக மழை தடையின்றி தொடர்ந்ததால், நீர்த்தேக்கங்களில் அதிக நீர் வரத்து வந்ததைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

gujarat rain

 

சமீபத்திய தகவலின்படி, மாநிலத்தில் உள்ள 204 நீர்த்தேக்கங்களில், 114 அணைகள் 90% நிறைந்துவிட்டதால், அவை ‘உயர் எச்சரிக்கையில்’ வைக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கியூசெக் நீரை நீர்த்தேக்கத்திலிருந்து விடுவித்துள்ளனர். 

இதன் விளைவாக, நர்மதா, பருச் மற்றும் வதோதரா மாவட்டங்களில் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளன.

114 dams put on high alert in Gujarat after heavy rain

guarat

 

Tamil