Skip to main content

ககன்யான் மிஷன்: ஒடிசா வீரர் நிகில் ராத் தேர்வு!!!

nikhil rath

இந்தியா சார்பில் வரும் 2021 ஆம் ஆண்டில் விண்ணில் பாயவுள்ள ககன்யான் மிஷனின் மனிதர்களைக் கொண்ட விண்வெளி விமானத்திற்கு முதற்கட்ட தகுதி தேர்வில் தகுதியான 10 விமானிகளை இந்திய விமான படை தேர்வு செய்துள்ளது.

ஆரம்ப சுற்றில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பலங்கிரின் விங் கமாண்டர் நிகில் ராத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிகில் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 விமானிகளும், ககன்யான் பயணத்தின் கீழ் விண்வெளிப் பயிற்சிக்காக ரஷ்யாவில் ஒரு வருடம் பயிற்சி பெறுவார்கள். 

இறுதி பட்டியலில் ஒடிசாவைச் சேர்ந்த இந்திய விமானப்படை விமானி நிகில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

gaganyan

ஏழு நாள் பயணத்திற்காக விண்வெளிக்குச் செல்லும் மூன்று விண்வெளி வீரர்களில் அவர் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலங்கிரைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான அசோக் ராத் மற்றும் மகளிர் ஆணைய உறுப்பினரான குசூம் ராத் ஆகியோருக்கு பிறந்தவர் தான் நிகில். 

1998 இல் பாலாங்கிரின் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், நிகில் 2000 ஆம் ஆண்டில் டெல்லி பப்ளிக் பள்ளியில் இருந்து இடைநிலை கல்வியை தொடர்ந்தார்.

முதல் முயற்சியில், நுழைவுத் தேர்வை முடித்து, தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) ஒரு பயிற்சியாளராக சேர்ந்தார். 2003 ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார்.

gaganyan

ககன்யான் மிஷனின் கீழ், விமான படையில் இருந்து மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இஸ்ரோவின் முதல் மனித விண்கலம் 2021 ஆம் விண்ணில் பாயவுள்ளது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் அனைவரும் 40 வயதிற்குட்பட்டவர்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) விண்வெளி பயணத்தின் குழு தேர்வுக்காக இந்திய விமான படையுடன் இணைந்தது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரூ .10,000 கோடி மதிப்பிலான இந்த ககன்யான் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Odisha born pilot Nikhil Rath shortlisted to go on ISRO's mission Gaganyaan

Tamil