Skip to main content

கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து-55 பேர் உயிரிழந்த பரிதாபம்

கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து கிஷ்மு நோக்கி பேருந்து ஒன்று சென்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடிய பேருந்து கவிழ்ந்தது. 

ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த கென்யா நாட்டில் சாலைகள் மிகவும் மோசமானவை. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் ஏராளமான விபத்துகளைச் சந்தித்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனமும் சாலைப் போக்குவரத்து மோசமாக இருக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 40 பயணிகள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட தகவலாக 55 பயணிகள் பலியானதாக கூறப்பட்டது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் 36 பேர் பலியாகினர். ஆண்டிற்கு சராசரியாக 3,000 பேர் கென்யாவில் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது
 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.