Skip to main content

காஷ்மீர் நிலை?- உதவி மையத்தில் குவியும் தொலைப்பேசி அழைப்புகள்!

kashmir

புதுடெல்லி: காஷ்மீரில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வைப் பற்றி விசாரிக்க 34,000 க்கும் மேற்பட்ட அலைபேசி அழைப்புகள், ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட மத்திய ரிசர்வ் படையின் உதவி மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலம் முழுவதும் 370 சட்டம் ரத்து செய்யப்பட்டத்தில் இருந்து, இணையம் , தொலைத்தொடர்பு என அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளநிலையில், அங்கு வசிக்கும் மக்களின் நலனை விசாரிக்கும் முயற்சியில் உறவினர்கள் உள்ளனர்.

ஆகஸ்ட் 5 க்குப் பிறகு 'மடட்கர்' உதவி எண் - 14411 மற்றும் இன்னும் சில மொபைல் எண்களுக்கு மொத்தம் 34,274 அழைப்புகள் வந்துள்ளன.

 

jammu kashmir

 

மத்திய ரிசர்வ் படை வீரர்கள், உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகளை கையாள்வது, விமான டிக்கெட்டுகளை வழங்குதல், ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே படிக்கும் மாணவர்களின் நேர்காணல் தேதி அல்லது தேர்வில் மாற்றம் குறித்து மக்களுக்குத் தெரிவித்தல் மற்றும் தகவல் அளித்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக உள்ளூர் மக்களை அவரவர் வீடுகளுக்கே சென்று அறிவிப்பு மற்றும் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

சிறுநீரக தொடர்பான வியாதிகள், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட 123 நோயாளிகளுக்கு ஹெல்ப்லைன் பணியாளர்களால் அவரவர் வீடுகளில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

jammu kashmir

 

370 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

நாட்டில் வசிக்கும் காஷ்மீர் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக 'மடட்கர்' எனும் முறையை, மத்திய ரிசர்வ் படை 2017 ஜூன் மாதம் தொடங்கியது. 

இது ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் இருந்து இயங்குகிறது. ட்விட்டரில் இந்த உதவிமையம் @CRPFmadadgaar ஆக செயல்படுகிறது.

மத்திய ரிசர்வ் படை என்பது ஒரு முன்னணி பயங்கரவாத எதிர்ப்பு படை ஆகும். காஷ்மீரில் சட்ட ஒழுங்கு நிலைநாட்ட 65 க்கும் மேற்பட்ட பட்டாலியன்களுடன் (தலா 1,000 பணியாளர்கள்) செயல்பட்டு வருகிறது.

Tamil