Skip to main content

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

QUEEN first look out

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணத்தை வெப் சீரிஸாக இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வருகிறார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.

ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்!

குயின் என பெயரிடப்பட்டுள்ள இதில் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் ஜெயலலிதாவின் பதின் பருவ காட்சிகளில் தோன்றுகிறார்.

18-30 வயதான கதாப்பாத்திரத்தை நடிகை அஞ்சனாவும், அதனை தொடர்ந்து ஜெயலலிதா ரோலில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஏற்று நடிக்கிறார்.

ஜெயலலிதா கொண்டு எடுக்கும் படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் கௌதம்மேனன் திரை உலகில் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டம் சம்பாதித்தவர். இந்த நிலையில் குயின் போஸ்டர் வந்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Gautham Vasudev Menon's Jayalalitha Biopic Web Series "Queen" First Look Out

jayalalitha web series
Tamil