Skip to main content

ஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்கும் இந்தியா-எச்சரிக்கும் அமெரிக்கா

ஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்கும் இந்தியா-எச்சரிக்கும் அமெரிக்கா

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ரஷ்யாவிடமிருந்து s - 400  ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவின் நடவடிக்கை, இந்திய - அமெரிக்க உறவுகளுக்கு உதவாது என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ரஷ்யாவிடமிருந்து s - 400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவின் நடவடிக்கை, இந்திய - அமெரிக்க உறவுகளுக்கு உதவாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "அமெரிக்காவின் எதிர்பையும் மீறி ஈரானிடமிருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மற்றும்  s - 400 ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்கும் இந்தியாவின்  திட்டம்  எந்தவகையிலும் இந்திய - அமெரிக்க உறவுக்கு உதவ போவதில்லை.

நாங்கள் இந்தியாவின் நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை அதிபர் ட்ரம்ப் பார்த்துக் கொள்வார்” என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா மீது பொருளாதராத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “ அதனை அதிபர்தான் கூற வேண்டும். அதிபருடைய பதிலை நான் கூற முடியாது. நான் வெள்ளை மாளிகை சார்பாகத் தான் பேச முடியும்” என்றார்.

 

ஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்கும் இந்தியா-எச்சரிக்கும் அமெரிக்கா

 

ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கப்படும் - தர்மேந்திர பிரதான்

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு இடையே  நவம்பரில் ஈரானிடமிருந்து  கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடத்த திங்கட்கிழமை தெரிவித்தார்.

ரஷ்யாவிடமிருந்து  S -400 ஏவுகணை வாங்கும் ஒப்பந்தத்தையும் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதற்கான பதிலை விரைவில் அறிவிப்பேன் என்று ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ஈரான் மீதான தடையானது வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

ஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷ்யாவிடம் ஏவுகணைகள் வாங்கும் இந்தியா-எச்சரிக்கும் அமெரிக்கா

 

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் முறிவு 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது  பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

america warns india over the business relationship with iran crude oil and russia s-400 missile

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.