Skip to main content

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதும் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகள் இடையே ராஜ் கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற மேற்கிந்திய அணி-பேட்டிங் தேர்வு

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி கேப்டன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். 

இந்தியாவின் அசத்தல் பந்துவீச்சு: 

இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய அணியின் துவக்க வீரர் பாவெலை (22) அஷ்வின் வெளியேற்றினார். பிராத்பெயிட் (14) குல்தீப் சுழலில் ஆட்டமிழந்தார். ஹோப் (36) உமேஷ் வேகப்பந்தில் வெளியேறினார். 

தற்போது மேற்கிந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

அணி விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர் (12-வது வீரர்).

மேற்கிந்தியத் தீவுகள்: ஜேசன் ஹோல்டர், சுனில் அம்ப்ரிஸ், தேவந்திரா பிஷூ, கிரெய்க் பிராத்வெயிட், ராஸ்டன் சேஸ், ஷேன் டவுரிச், ஷானோன் கேப்ரியல், ஜஹ்மர் ஹேமில்டன், ஷிம்ரோன் ஹெட்மையர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோசப், கீமோ பால், கெய்ரன் பொவல், கேமர் ரோச், ஜோமல் வாரிக்கன்.

india vs west indies 2 nd test match at hyderabad

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.