Skip to main content

இளைஞர் ஒலிம்பிக்ஸ் -தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சௌதரி

இளைஞர் ஒலிம்பிக்ஸ்

அர்ஜென்டினாவில் நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக்ஸ் தொடரில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவுன் சவுரப் சௌதரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டி

அர்ஜென்டினாவின் பியோனஸ் ஏர்ஸில் 3வது இளைஞர் ஒலிம்பிக்ஸ் தொடர் கடந்த 6ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சவுரப் சௌதரி பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

244.2 புள்ளிகளில் இலக்கை எட்டிய சவுரப் சௌதரி தங்கப் பதக்கமும், தென் கொரியாவின் சங் யுங்கோ 236.7 புள்ளிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கமும், சுவிட்சர்லாந்தின் சொலாரி ஜேசன் 215.6 புள்ளிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியிலுள்ள கலியான கிராமத்தைச் சேர்ந்த சவுரப் ஐஎஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். 

இந்த இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3 தங்கம் மற்றும் 3 வெள்ளிப்பதக்கம் என்று 3 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.