Skip to main content

எதிர்மறை விமர்சனங்களுக்கு இடையே வசூல் சாதனை படைத்த-சாமி ஸ்கொயர்

சாமி 2

சாமி 2 படம் வெளியான முதல் நாளில் (செப்டம்பர் 21 )சென்னையில் ரூ. 65 லட்சம் வசூல் சாதனை.

நடிகர் விக்ரம் நடிப்பில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் செப்டம்பர் 21ஆம் தேதி சாமி 2 என்ற சாமி ஸ்கொயர் திரைப்படம் வெளியானது. 

இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிகை கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் 350 திரைகளில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இந்தப் படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் இருந்து படத்திற்கு வரவேற்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 

 

சாமி 2

 

படம் வெளியான முதல் நாளில் (செப்டம்பர் 21 )சென்னையில் சாமி 2 ரூ. 65 லட்சம் வசூல் சாதனை  படைத்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ. 6.5 கோடி குவித்துள்ளது. படத்தின் விமர்சனம் நெகடிவ் ஆக இருந்தாலும், அதையெல்லாம் கடந்து வசூலில் சாதித்து வருகிறது. உலகம் முழுவதும் ரூ. 12 கோடி ஈட்டியுள்ளது. 

பி மற்றும் சி மையங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வறவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.