Skip to main content

"எனை நோக்கி பாயும் தோட்டா" - வெளியாவதில் மீண்டும் தாமதம்!

#ENPT

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "எனை நோக்கி பாயும் தோட்டா"திரைப்படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் இப்படம் நாளை வெளியாகாது என சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கதாநாயகன் இடையில் பனிப்போர் உருவாகியுள்ளது. தனுஷ் பேசிய சம்பள பேச்சு இப்போது சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது. சம்பளமே தராமல் பலர் ஏமாற்றுகிறார்கள் என்று சமீபத்தில் தனுஷ் பேசிய பேச்சுதான் இன்றைக்கு ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.

இந்நிலையை கடன் பிரச்சனை காரணமாக இப்படம் நாளை வெளியாக கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 3 ஆண்டுகளாக பிரச்னையில் சிக்கியுள்ள "எனை நோக்கி பாயும் தோட்டா" எப்போது வெளியாகும்? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

"Enai Nokki Payum Thotta" Will not be Released Tomorrow - Highcourt

Tamil