Skip to main content

சர்க்கார் படம் ‍- அதிகாலை 1 மணி காட்சி திரையிட வேண்டுகோள்

சர்கார்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

நடிகர் விஜய், துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து சர்கார் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி உள்ள இப்படத்திற்கு இசைப்புயல் மற்றும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இசை வெளியீட்டு விழா

அண்மையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் கலாநிதிமாறன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், யோகி பாபு, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 

சர்கார் படம்

 

இப்படம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அப்படியில்லையென்றாலும் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், வரும் 18ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில், இப்படத்தின் ரிலிஸ் தொடர்பாக ரோகிணி சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளது.

அதில், தீபாவளிக்கு வெளியாகும் சர்கார் படத்தின் அதிகாலை 1 மணி காட்சி திரையிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.