Skip to main content

சபரிமலை விவகாரம் -தொடர் குழப்பத்தில் திருவாங்கூர் தேவஸ்தானம்

 சபரிமலை விவகாரம் -தொடர் குழப்பத்தில் திருவாங்கூர் தேவஸ்தானம்

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தானம்(TDB), உச்சநீதிமன்றத்தின் 28 செப்டம்பர் ஆணைக்கு இணங்க வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய முடியாமல் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளது.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

வரலாற்று ரீதியாக பார்த்தால், அய்யப்பன் ஒரு 'பிரம்மச்சாரி' எனவே 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் (பெண்களுக்கான மாதவிடாய் காலம்) சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற போவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை வெளியிட்டார். இதை வைத்து அரசியல் செய்யவேண்டாம் எனவும் உச்சநீதிமன்றத்தை மதித்து செயல்படுவதாகவும். இந்த தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு  மனு தாக்கல் செய்ய போவதில்லை எனவும் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை, கேரள உயர் நீதிமன்றம், கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு தேவையான ஏற்பாடு செய்யப்பட்ட விதிகள் குறித்து தகவல் தெரிவிக்க திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்திற்கு உத்தரவிட்டது.

ஆலயத்தை மீண்டும் திறக்கும் முன்னரே, பெண்களுக்கு 100 புதிய கழிவறைகளை நிர்மாணிக்கப்படும் எனக் கூறியதுடன், எளிதில் அடையாளம் காணப்படும் விதமாக இளஞ்சிவப்பு வண்ணத்தில் அந்த கழிப்பறைகள் இருக்கும். பெண் பக்தர்கள் அணிவகுத்து நிற்கவும், பம்பா மற்றும் சன்னிதானத்தில் 'விக்கி' வைக்கவும் இடங்கள் ஒதுக்கப்படும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆனால் கடந்த புதன்கிழமை பெண் பக்தர்களுக்காக எந்தவொரு ஏற்பாடும் செய்யவில்லை என திருவாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவர் பத்ம குமார் கூறியுள்ளார்.

மேலும் அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து கேரளா உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், அதன் பிறகு உயர்நீதிமன்றம் கூறும் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட உள்ளோம் என கூறினார்.

confusion in sabarimalai case travancore devaswom board

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.