Skip to main content

சிபிஎஸ்இ பொது தேர்வில் மாற்றங்கள் - மனிதவள மேம்பாட்டு ஆணையம்

சிபிஎஸ்இ

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முறையில் 2020ம் ஆண்டு முதல் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மனித வள மேம்பாட்டு துறை அதிகாரி கூறுகையில், "10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில், கேள்வி கேட்கும் விதத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 1 முதல் 5 மதிப்பெண்கள் கொண்ட சிறு கேள்விகள் கேட்கப்படும். மாணவா்களின் புரிதல் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் கேள்விகள் அமைக்கப்படும் " என்று கூறினார்.

மேலும் சிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி கூறுகையில் "தொழிற்கல்வி பாடங்களில் படிக்கும் மாணவர்கள் குறைவு என்பதால் அதற்கான தேர்வுகள் பிப்ரவரி மாதமே நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது. மேலும் தொழிற்கல்வி அல்லாத பாடங்களுக்கு மார்ச் மாதம் தேர்வு நடத்த வாய்ப்புள்ளது. இதனால் தேர்வு முடிவுகள்முன்கூட்டியே வெளிவரும்" என்று கூறினார். 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.