Skip to main content

சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் குறைக்கப்படும் - பிரகாஷ் ஜவடேகர்

பிரகாஷ் ஜவடேகர்

அடுத்த கல்வி ஆண்டில் என்.சி.இ.ஆர்.டி. பள்ளிப் பாடத்திட்டத்தில் 10 முதல் 15 சதவீதம் பாடம் குறைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு.
 

வரும் கல்வி ஆண்டில் என்.சி.இ.ஆர்.டி. பள்ளிப் பாடத்திட்டத்தில் 10 முதல் 15 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். 

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வியாழக்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

 

கேந்திர வித்யாலயா

 

என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என வலியறுத்தி ஒரு லட்சத்திற்கும் மேலான கோரிக்கைகள் வந்துள்ளன என்றும் இதனால் அடுத்த கல்வி ஆண்டு முதல் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் 10-15% குறைக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தைப் பின்பற்றும் சி.பி.எஸ்.இ. மற்றும் ஸ்டேட் போர்டு பள்ளிகளுக்கு இந்த மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமலாக வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் ஜவடேகர் தெரிவித்தார்.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.