Skip to main content

சென்னை விமான நிலையத்தில் ’நக்கீரன்’ கோபால் திடீர் கைது

சென்னை விமான நிலையத்தில் ’நக்கீரன்’ கோபால் திடீர் கைது

ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக "நக்கீரன்" பத்திரிக்கை ஆசிரியர்  கோபாலை சென்னை தனிப்படை காவல்துறையினர் இன்று காலையில் கைது செய்தனர். 

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரத்தில், ஆளுநர் மாளிகை தெரிவித்த புகாரை அடுத்து காவல்துறையினர் நக்கீரன் கோபாலை கைது செய்துள்ளனர். 

சென்னையிலிருந்து புனே செல்ல விமான நிலையம் வந்த ‘நக்கீரன்’ கோபாலிடம் அங்கு வந்த தனிப்படை காவல்த்துறையினர், விவரங்களை தெரிவித்து கைது செய்தனர். மேலும் தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக அவர் காவல் நிலையம் கொண்டு செல்லப்படுவார் என்று தெரிகிறது.

 

சென்னை விமான நிலையத்தில் ’நக்கீரன்’ கோபால் திடீர் கைது

 

அங்கு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு , வாக்குமூலம் பெறப்பட்டு, நீதிபதி முன்பு ’நக்கீரன்’ கோபால் நிறுத்தப்படுவார். அதை தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளிவந்துள்ளது. 

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் 

சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள ‘நக்கீரன்’ கோபால் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இது தொடர்பான விவரங்களை தனிப்படை காவல்துறையினர் விரைவில் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கல்லூரி மாணவிகளை தவறாக பயன்படுத்த முயற்சி செய்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை விமர்சித்து ’நக்கீரன்’ பத்திரிக்கையில் செய்தி வெளிட்டது தொடர்பாக, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.