Skip to main content

"அரசியலிலிருந்து விலகி இருங்கள்" - கமல், ரஜினிக்கு சிரஞ்சீவி அறிவுரை!

"அரசியலிலிருந்து விலகி இருங்கள்" - கமல், ரஜினிக்கு சிரஞ்சீவி அறிவுரை!

அரசியலிலிருந்து விலகி இருங்கள் என்று கமலுக்கும் ரஜினிகாந்துக்கும் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறிவுரை வழங்கி உள்ளார். 

நீங்கள் அரசியலில் இருக்க நினைத்தால் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் ரஜினியும், கமலும் தொடர்ந்து அரசியலில் இருந்து மக்களுக்கான உழைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டால், அனைத்து சவால்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்கள் வித்தியாசமான அணுகுமுறையால் அவற்றை கையாள்வார்கள் என்று நம்புகிறேன். சமீபத்திய லோக்சபா தேர்தலில் கமல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், துரதிஷ்டவசமாக வெற்றி கிடைக்கவில்லை. 

2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் கட்சியை துவங்கிய கமல், சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் களம் இறங்கினார். கமல் போட்டியிடவில்லை என்றாலும், அவரது கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். 

இருந்தும் ஒரு இடத்தில் கூட மக்கள் நீதி மையம் வெற்றி பெறவில்லை. ரஜினி இதுவரை கட்சி துவங்கவும் இல்லை. தேர்தலில் போட்டியிடவும் இல்லை. 

2008 ஆம் ஆண்டு பிரஜா ராஜ்யம் கட்சியை துவங்கிய சிரஞ்சீவி, 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 294 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. 

இதில் சிரஞ்சீவி, திருப்பதி மற்றும் அவரது சொந்த தொகுதியான பலேகால் தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் திருப்பதியில் வெற்றி பெற்ற சிரஞ்சீவி அவரது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தார்.

"Stay Out of Politics" - Chiranjeevi Advises Kamal and Rajinikanth

Tamil