Skip to main content

அமெரிக்காவின் தடைகளை மீறி ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கும் இந்தியா!

russia india

அமெரிக்க பயணத்தின் போது, ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதற்கான இந்தியாவின் உரிமையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிலைநாட்டினார்.

"இந்தியாவிற்கு தேவையான ஆயுதங்களை எந்த நாட்டிடம் இருந்து வாங்கவேண்டும் என்பதை தேர்வு செய்வது எங்கள் சுதந்திரம், அதை அங்கீகரிப்பது ஒவ்வொருவரின் ஆர்வத்திலும் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்," என்று மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கூறினார்.

அமெரிக்காவிடமிருந்து பொருளாதாரத் தடைகள் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், ரஷ்யாவிலிருந்து ஏவுகணை பாதுகாப்பு முறையை வாங்குவதற்கான இந்திய நாட்டின் உரிமையை வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நிலைநாட்டினார். 

வாஷிங்டனுக்கு பயணம் செய்த திரு. ஜெய்சங்கர், அமெரிக்க கவலைகளைப் பற்றி இந்தியா விவாதித்து வருவதாகக் கூறினார்.

ஆனால் ரஷ்யாவிலிருந்து எஸ்-400 வாங்கியதன் தலைவிதி குறித்த இறுதி முடிவை முன்னறிவிக்க மறுத்துவிட்டார் ஜெய்சங்கர்.

புதுடில்லியின் போட்டியாளரும், தலிபானின் வரலாற்று கூட்டாளியுமான பாகிஸ்தானைக் கடந்து செல்லும் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு சப்ளை வழியை உறுதி செய்வதற்கான ஒரு வழியாக ஈரானின் சபாஹர் துறைமுகத்தை விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

On U.S. trip, Jaishankar defends India's right to buy Russian arms

Tamil