Skip to main content

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் சுந்தர் பிச்சை ரகசிய சந்திப்பு 

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் சுந்தர் பிச்சை ரகசிய சந்திப்பு 

டிரான் வீடியோவை ஆய்வு செய்யும் பாதுகாப்பு அமைச்சகத்துடனான ஒரு சர்ச்சைக்குரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை துண்டிக்க வேண்டும் என கூகுள் நிறுவனத்தின் பணியாளர்கள் அளித்த கோரிக்கையால், வெடித்த பதட்டங்களை சரி செய்ய கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன்க்கு ரகசிய விசிட் அடித்துள்ளார்.

இராணுவத் தலைவர்களுடனான ஒரு குழுவோடு திரு சுந்தர் பிச்சை ஆலோசனை நடத்தினார், அந்த குழுவில் பெரும்பாலும் பாதுகாப்பு மற்றும் ராணுவ அமைச்சகத்தின் பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு மாவன் என்றழைக்கப்படும் செயற்கை-உளவுத்துறை ட்ரோன் முறையை மேற்பார்வை செய்யும் பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரிகளே கலந்து கொண்டனர்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இக்கட்டான சூழ்நிலையிலும் மேலே பறக்கக் கூடிய டிரோன்கள் எடுக்கும் காணொளியில் கார்கள், கட்டிடங்கள் மற்றும் பிற பொருட்களைத் தானாக பதிவு செய்யும் திட்டப்பணி மேவன் உருவாக்க, அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் கூகுள் நிறுவனம் முன்னதாக பணியாற்றியது.

ஆனால், ஜூன் மாதத்தில், கூகுள் நிறுவன ஊழியர்களின் எதிர்ப்பால், இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியாது என கூகுள் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டது.

பென்டகன் கூகுள் கூட்டணியின் முதல் பெரிய செயற்கை நுண்ணறிவு திட்டமான மாவன் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் பதட்டமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது. 

திட்டம் மாவன் குறித்த கூகுளின் பணியில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மனநிறைவு இல்லாததே இதற்கு காரணம்.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.