Skip to main content

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நடால்!!!

Rafael Nadal

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கடுமையாக போராடிய ரபேல் நடால், ரஷ்ய வீரர் மெத்வதேவை வீழ்த்தி நான்காவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 

இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

சவால் நிறைந்த இறுதி போட்டி:

நடால் செய்த சிறுசிறு தவறுகளை சாதகமாக பயன்படுத்திய மெத்வதேவ் அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால் நடாலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனவே, அடுத்த செட்டில் பதற்றமின்றி மிகவும் கவனமாக ஆடினார். கடும் போராட்டத்திற்கு மத்தியில் 5வது செட்டை நடால் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

rafeal nadal

கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த இப்போட்டியில், 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

4-வது முறையாக சாம்பியன் பட்டம்:

இதன்மூலம் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் கைப்பற்றியிருக்கிறார். அமெரிக்க ஓபனில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால், ரோஜர் பெடரின் உலக சாதனையை (20 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்வார்.

தற்போது 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் பெடரர் முதலிடத்தில் உள்ளார். 19 பட்டங்களுடன் நடால் 2 வது இடத்தில் உள்ளார்.

16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் நோவக் ஜோகோவிச் 3 வது இடத்திலும், 14 பட்டங்களுடன் பீட் சாம்ப்ராஸ் 4வது இடத்திலும் உள்ளனர்.

இந்த தொடரில் ரோஜர் பெடரர் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Rafael Nadal takes five-set US Open thriller for 19th Slam title

Tamil