Skip to main content

ஐதராபாத் நிஜாமின் சுமார் 300 கோடி ரூபாய் இந்தியாவுக்கே சொந்தம் - இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு!

Hyderabad Nizam Mir Osman Ali Khan

லண்டன் வங்கியில் இருக்கும் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம் என இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

லண்டன் வங்கியில் இருக்கும் ஐதராபாத் நிஜாமின் சுமார் 300 கோடி ரூபாய் இந்தியாவுக்கே சொந்தம் என இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

பிரிட்டிஷ் இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கிய ஐதராபாத், 1948-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. அப்போது ஐதராபாத்தை ஆட்சி செய்த நிஜாம் உஸ்மான் அலி கான், 10 லட்சத்து 7 ஆயிரத்து 940 பவுண்டு பணத்தை (தற்போதைய மதிப்பு சுமார் ரூ.8.70 கோடி) பாகிஸ்தானுக்கான அப்போதைய இங்கிலாந்து தூதர் ஹபிப் இப்ராகிம் ரகிம்தூலாவுக்கு கைமாற்றினார்.

nizam

இந்த பணத்தை அவர் லண்டனில் உள்ள நாட்வெஸ்ட் வங்கியில் போட்டு வைத்திருந்தார். 70 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்த பணம் தற்போது 35 மில்லியன் பவுண்டாக (சுமார் ரூ.300 கோடி) உயர்ந்துள்ளது.

இந்த நிதிக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமை கோரி வரும் நிலையில், லண்டனில் உள்ள நீதிமன்றத்தில், இது தொடர்பாக வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் ஐதராபாத் நிஜாமின் வாரிசுகளான முகரம் ஜா (8-வது நிஜாம்), அவரது சகோதரர் முபகம் ஜா ஆகியோரும் இந்தியாவுடன் இணைந்து சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

சுமார் 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் லண்டனில் உள்ள நீதிக்கான ராயல் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியாவுக்கு சாதகமாக நீதிபதி மார்கஸ் ஸ்மித் தீர்ப்பு வழங்கினார்.

Pakistan Loses UK Court Battle For Hyderabad Nizam's 35 Million Pounds

Tamil