Skip to main content

ஐ.நா பொதுச்சபையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்!

PM Modi to address 74th Session of UN General Assembly today

பிரதமர் நரேந்திர மோடி இன்று நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையின் 74 வது அமர்வில் உரையாற்றவுள்ளார். ஐ.நா.வின் 74 வது பொதுச் சபையின் அமர்வு இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்க உள்ளது. 

இந்த அமர்வில் இந்திய பிரதமர் மோடி இரவு 8:00 முதல் 9:00 மணி வரை உரையாற்ற உள்ளார், அவரை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்ற உள்ளார்.

இந்த அமர்வில் வறுமை ஒழிப்பு, மலிவு விலையில் சுகாதாரம், பயங்கரவாதம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தனது அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளை முன்னிலைப்படுத்த வாய்ப்புள்ளது. 

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய பிரதமர் மோடியின் இந்த உரை, பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பயங்கரவாதம் குறித்து கடுமையாகப் பேசுவதைத் தவிர, உலக அளவில் இந்தியாவின் அபிலாஷைகளை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

jammu kashmir

இந்த அமர்வில் வறுமை ஒழிப்பு, மலிவு விலையில் சுகாதாரம், பயங்கரவாதம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தனது அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளை முன்னிலைப்படுத்த வாய்ப்புள்ளது. 

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய பிரதமர் மோடியின் இந்த உரை, பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பயங்கரவாதம் குறித்து கடுமையாகப் பேசுவதைத் தவிர, உலக அளவில் இந்தியாவின் ஆர்வத்தை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஐநாவில் பிரதமரின் இந்த உரை உலக அரங்கில் இந்தியா ஒரு பெரிய அங்கத்தை வகிக்க தயாராக இருக்கும் சரியான சமயத்தில் நிகழவுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து சர்வதேச தரவரிசை மற்றும் குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PM Modi to address 74th Session of UN General Assembly today

narendra modi

 

Tamil