Skip to main content

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு-கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு-கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 54 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறையினா் முடக்கம் செய்துள்ளனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றதாகவும், இதற்கு காா்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இதற்காக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் வீட்டில்  சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்திய பின்னர், அதிகாரிகள் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். 

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கம் செய்துள்ளனர். டெல்லி, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

மேலும் கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்கையும் அமலாக்கத்துறையினர் முடக்கம் செய்துள்ளனர். இதே போன்று இந்த வழக்கில் தொடர்புடைய தொழில் அதிபர்  இந்திராணி முகர்ஜியின் சொத்துகளையும் அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.