Skip to main content

48 உயர் ரக இராணுவ ட்ரான்களை பாகிஸ்தானுக்கு விற்க சீனா முடிவு 

48 உயர் ரக இராணுவ ட்ரான்களை பாகிஸ்தானுக்கு விற்க சீனா முடிவு 

48 உயர் ரக இராணுவ டிரோன்களை பாகிஸ்தான் நாட்டிற்கு விற்க சீனா முடிவு செய்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய உடன்படிக்கை என ஊடகம் 

இந்த ஒப்பந்தம் குறித்த பணவிவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

விங் லோங் II, எனப்படும் ஒரு உயர்-இறுதி உளவு, ஆற்றல்மிக்க விமானம், செங்டு விமான தொழில்துறை நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது.

யுஏவி எனப்படும் ஆளில்லா வான்வழி விமானமும் இதனுடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.

பாகிஸ்தானிய இராணுவத்திற்கு மிகப்பெரிய ஆயுதம் வழங்கியாக இருக்கிறது சீனா. இரு நாடுகளும் ஒன்றிணைந்து ஜேஎஎஃப்-தண்டர் எனப்படும், ஓர் இயந்திர போர் விமானங்களை தயாரிக்கின்றனர்.

ரஷ்யாவில் இருந்து S-400 அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு முறைமைகளை வாங்குவதற்கான இந்தியாவின் நடவடிக்கைக்கு பிறகு, இந்த உயர்-ரக இராணுவ ட்ரான்களை பாகிஸ்தானிற்கு விற்பனை செய்ய சீனா முடிவு செய்துள்ளது.இந்தியா ரஷ்யா இடையேயான இந்த ஒப்பந்தம் ரஷ்ய அதிபர் புடினின் இந்திய வருகையின் போது கையெழுத்தானது.

சீனாவின் உயர் ரக இராணுவ டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி ஷெர்டில்ஸ் ஏரோபாட்டிக் குழு, அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவித்தது.

இந்த ஒப்பந்தம் எந்த அளவை எட்டியுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.