Skip to main content

2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் !!!

2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் !!!

2030 ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகையில் பாதி பேருக்கு குடிநீர் இல்லாமல் போகும் அவல நிலை உருவாக இருக்கிறது.

டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய பெருநகரங்களில் 2020 ஆம் ஆண்டின ஆரம்ப நிலையிலேயே, நிலத்தடி நீர்நிலை நெருக்கடி மோசமானதாக இருக்கக்கூடும், என 'கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டு' நிடி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது.

உலகின் பல பகுதிகளில் நீர் பற்றாக்குறை, சீதோஷ்ண நிலை மாற்றங்கள் மற்றும் உயரும் கடல்நீர்மட்ட அளவு போன்ற ஸ்திரமின்மைக்கு முகம் கொடுக்கின்றன.

அதே நேரத்தில், இந்தியாவிலும் இந்த நீர்நிலை நெருக்கடி மோசமடைந்து வருகிறது, பாதுகாப்பற்ற முயற்சிகள் காரணமாக இந்நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவின் நீர் நெருக்கடி

  • டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை உட்பட 21 நகரங்கள் 2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு, நிலத்தடி நீர் இல்லாத நிலையில் இருக்கும்.

 

  • இந்தியாவின் மக்கள் தொகையில் 40% மக்களுக்கு 2030 ம் ஆண்டில் குடிநீர் இல்லாமல் போகும்.

 

  • 2030ஆம் ஆண்டளவில் நீர் பற்றாக்குறை காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

  • 53 சதவிகிதம் விவசாயம் மழையை சார்ந்து உள்ளது.

 

  • 2030 ஆம் ஆண்டளவில் இரு மடங்கு நீர் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

  • ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாமல் 2 லட்சம் பேர் இறக்க நேரிடும்.

 

மழையும், கடுமையான வறட்சியின் காரணமாகவும், இந்தியாவின் விவசாயத்தில் பெரும்பகுதி  மற்றும் நீர்ப்பாசனம் பயனற்று போகும்.

சீனா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை விட இந்தியா 3 மடங்கு அதிக தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்துகிறது.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.